90 காலகட்டங்களில் புதுமுக நடிகர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது இந்த சமயத்தில்தான் தளபதி விஜய் அஜித் போன்றவர்கள் கால் தடம் பதித்தனர். ஆனால் அஜித் விஜய் ஆகியவர்கள் சினிமா ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்தார்கள்.
அப்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து அஜித் விஜய்யை ஓவர்டேக் செய்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார் நடிகர் பிரசாந்த் ஆரம்பத்தில் இவர் நடித்த ஜீன்ஸ், ஜோடி, குட் லக், சாக்லெட் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்து மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக பிரசாந்தை மாற்றியது.
தொடர்ந்து சூப்பராக ஓடிக் கொண்டிருந்த இவர் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு இவரது படங்கள் தோல்வியை தழுவ ஒரு கட்டத்தில் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் அதிலிருந்து மீண்டு பிறகும் படங்களில் நடித்துதான் பார்த்தார் ஆனால் எந்த படமும் வெற்றி பெறாததால் தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் தமிழ் தெலுங்கு ஆகிய படங்களில் குணச்சித்திர மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் பிரசாந்த் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் வெற்றிபெறும் பட்சத்தில் தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் மீண்டும் பிடிப்பார் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் பேசியது.
இப்பொழுது காலகட்டத்தில் பேஸ்புக் வாட்ஸ் அப் என நிறைய வந்து இருக்கிறது ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு லெட்டர் தான் வரும். அந்த லெட்டரை திறந்து பார்த்தால் ஒவ்வொருவருக்கும் கவிதை செம சூப்பராக இருக்கும். எனக்கு அப்பொழுது அவ்வளவு கடிதங்கள் வந்தன. நான் அப்பொழுது அனுபவித்தது எல்லாம் இப்பொழுது எந்த ஒரு நடிகரும் அனுபவிக்கவில்லை என கூறினார்.