கதை படும் மாசாக இருக்கிறது எனக்கு ஓகே தான்.! பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் சிம்பு.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தற்போது அனிமேஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏ ஆர் முருகதாஸ் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது இதற்காக நடிகர் சிம்புவை இரண்டு முறை சந்தித்துள்ளதாகவும் இரண்டு முறையும் அவரிடம் கதையை கூறி ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு வருடங்களாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வந்த ஏ ஆர் முருகதாஸ் தற்போது அனிமேஷன் படத்தை இயக்கி வருகிறார் இது முடிந்தவுடன் அடுத்தது சிம்புவை வைத்து பான் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதை சிம்புவிற்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அது மட்டுமல்லாமல் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தால் இந்த படத்தை உருவாக்க ரெடி எனவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சிம்பு மற்றும் முருகதாஷ் இனையும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது உடல் தோற்றத்தை மாற்றி நடித்து வரும் அனைத்து படங்களும் தற்போது வெற்றி பெற்று வருகிறது அதே போல் இயக்குனர் முருகதாஸ் உடன் இனிய போகும் இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து உள்ளார் நடிகர் சிம்பு. இந்த படம் வெளியாகி நல்ல வர்டவேற்பை பெற்றது.