நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டடித்து உள்ளதால் அவரது வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று ஓடிக்கொண்டே இருக்கிறார்.
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளை சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.
இந்த படத்தில் இருந்து இதுவரை வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியே வந்து ரசிகர்களை கொண்ட வைத்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது இந்த படம் ஒரு வழியாக நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
இது இப்படியிருக்க சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகளும் இணையதள பக்கத்தில் வெளிவருகின்றன அப்படி டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சற்று சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது தனது பதிலை கொடுத்துள்ளார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்.
டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததால் தான் நீங்கள் சம்பளத்தை உயர்த்திக் உள்ளீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் என்னுடைய சம்பளத்தை உயர்த்துவது நான் இல்லை என்னுடைய படத்தின் தயாரிப்பாளர் தான் தீர்மானிக்கிறார்கள் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அசத்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.