சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று இதுவரை நான் ஒரு கோடி வசூலை கடந்துள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் பார்த்து ரசித்தது மட்டுமில்லாமல் ஒரு சிலரோ அதிர்ந்து போய்விட்டார்கள் என்றே சொல்லலாம் அதில் நடிகர் மகேஷ்பாபுவும் ஒருவர் இவர் விக்ரம் திரைப்படத்தை அண்மையில் பார்த்து வியந்து போய்விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் விக்ரம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துவிட்டது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை நான் நேரில் சந்தித்து விக்ரம் திரைப்படம் உருவானது பற்றி பேச விரும்புகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி பகத் பாஸில் ஆகிய இருவரும் நடிப்பில் ஜொலித்து வருகிறார்கள்.
இவ்வாறு இவர்களுடைய நடிப்புக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது என்ற வகையில் தங்களுடைய நடிப்பு திறனை வழிகாட்டியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் மிகவும் பிரமாண்டமாக தன்னுடைய இசையை கொடுத்துள்ளார்.
பொதுவாக மற்ற அனைத்து நடிகர்களை பற்றியும் விமர்சிக்கும் தகுதி எனக்கு கிடையாது ஆனால் திரை உலகில் லெஜன்ட் கமலஹாசனை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி கிடையாது என கூறியது மட்டுமில்லாமல் நானும் அவருடைய ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.