மற்றவர்கள் நினைப்பது போல நான் சந்தோஷமாக இல்லை உண்மை நிலவரத்தை சொல்லி வருத்தப்பட்ட நடிகர் ஜெய்..!

jai
jai

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் ஹீரோ நடிகர் ஜெய் இவர் தேனிசைத் தென்றல் தேவாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் முதலில் ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்ற கனவில் தான் இருந்தார் எதிர்பாராத விதமாக இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளினார். அந்த வகையில் சென்னை 600028, சரோஜா, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்பொழுதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் இவருக்கு  வெற்றியை பெற்றுக் கொடுத்தன தொடர்ந்து சூப்பராக ஓடிய..

நடிகர் ஜெய் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகமாக உருவாகினர் ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு இவர் பிறந்த நடித்த திரைப்படம் சுத்தமாக வெற்றியை ருசிக்கவில்லை இதனால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது..

அதை நிமிர்ந்த இவரும் என்ன என்னவோ செய்துதான் பார்க்கிறார் ஆனால் எதுவுமே அவருக்கு கை கூட வில்லை.. இப்பொழுது வேட்டை மன்னன், பிரேக்கிங் நியூஸ், காபி வித் காதல்  போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் விட்ட இடத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அவர் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் நினைப்பது போல நான் ஒன்றும்  ஜாலியாக இல்லை எனது குடும்பம் இப்பொழுதும் கடனில் தான் இருக்கிறது என கூறி அதிர வைத்து விட்டார்..