தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தற்பொழுது இவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து தற்பொழுது பட்டையை கிளப்பி வருகிறது. இதனை அடுத்து இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது ஆனால் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவரும் என கணிக்கப்படுகிறது.
தற்பொழுது தமிழகத்தில் ஜெயராஜ், ப்னிக்ஸ் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து பல பிரபலங்களும் இதற்கு குரல் கொடுத்து வருகின்றனர் ஆனால் சினிமாவில் ஒரு சிலரே இதற்காக குரல் கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் இது வரைலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இன்னும் இதற்கு குரல் கொடுக்கவில்லை இதற்கு பலரும் அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் மட்டும் தான் பேசுவார் என கிண்டலடித்தனர்.அதற்கு ஏற்ற வாரு தாடி பாலாஜி அவர்களும் நான் இசை வெளியீட்டு விழாவில் பேசும் நடிகர் இல்லை என கலாய்த்தும் உள்ளார்.