தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த வகையில் ரஜினி, விஜய், அஜீத், சிம்பு போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார். மேலும் இவர் தற்போது இவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா, விஜய் சேதுபதி போன்ற டாப் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் படத்தின் ஒரு சில பாடல்கள் கூட சமீபத்தில் வெளியாகி செம ட்ரெண்ட் ஆகின. தற்போது நயன்தாரா கனெக்ட், அக்சிஜன் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி சில பிசினஸ்களிலும் பங்கு பெற்றுள்ளார். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றன. மேலும் இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
தற்போது இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதிலளித்த போது அதில் ஒரு ரசிகர் ஒருவர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு எங்களது காதல் தற்போது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது மேலும் எங்களுக்கு என்று தனி குறிக்கோள்கள் சில இருக்கின்றன அதை கூடிய விரைவில் நிறைவேற்றி விட்டு பின்பு திருமணம் செய்து கொள்வோம்.
சினிமா நட்சத்திரங்களின் திருமணம் என்றால் அதிக செலவாகும் அதனால் அதற்கும் சேர்த்து சம்பாதித்துவிட்டு மற்றும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த பின்பு நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என கூறினாரார். இச்செய்தி தற்போது இணையதளத்தில் உலா வருகிறது