என்னுடைய ரோல் மாடல் தல தோனியை வைத்து நான் படம் பண்ணப்போறேன் – புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக சொன்ன விக்னேஷ் சிவன்.!

dhoni-and-vignesh-shivan

தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக களத்தில் இறங்கி வேலை செய்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தற்போது பல படங்களை தயாரித்து வெற்றியை கண்டு வருகிறார்.

இதோடு மட்டும் தன்னை சினிமா உலகில் நிறுத்திக் கொள்ளாமல் பாடகராகவும் தற்போது வலம் வருகிறார். சொல்லப்போனால் வலிமை படத்தில்  இரண்டு பாடல்களை பாடி அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது திறமையைக் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வருகிறது இருப்பினும் அவருக்கு மிகவும் பிடித்தது இயக்குனர் தொழில் தான். ஏனென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை  பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

ஆனால் இவ்வாறு இயக்கமும் புதிய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக  பாக்க காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் தற்பொழுது கூட சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியவர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தையும் எடுத்து உள்ளார்.

படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரான தல தோனி சமீபத்தில் நேரில் சந்தித்து உள்ளார் அப்போது அவருடன் இணைந்து இவரும் மலர்கொத்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனை சந்தோஷத்தோடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தை  வெளியிட்டு சில பதிவுகளையும் போட்டுள்ளார்.  அதில் அவர் சொல்லியுள்ளது எனது முன்மாதிரியான அவரை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பதிவிட்டிருந்தார். இச்செய்தி மற்றும் புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

dhoni and vignesh
dhoni and vignesh