திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் மாறுபட்டு இருப்பார்கள் ஆனால் இரண்டிலும் ஒரே மாதிரியான பண்புகளை வைத்திருப்பவர் நடிகர் அஜித் அதனால் தான் ரசிகர்கள் அஜித் நடிப்பையும் தாண்டி அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.
சினிமா பிரபலங்கள் கூட ஆச்சரியப்பட்டு அவரது ரசிகராக மாறிப்போயுள்ளனர் அந்த அளவிற்கு ரொம்ப நல்ல மனிதனாக பயணிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படத்தை..
தொடர்ந்து தனது 61வது அதையும் மீண்டும் ஹச். வினோத்துடன் கொடுத்துள்ளார் இந்த படம் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறது அந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் காதலின் விக்னேஷ் சிவனுடன், அஜித் முதல் முறையாக கைகோர்த்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்கான அதிகாரபூர்வமான தகவல்கள் எல்லாம் வெளியாகிவிட்டன.
விக்னேஷ் சிவன் எப்பொழுதும் காமெடி கலந்த படங்களை கொடுப்பது வழக்கம் ஆனால் அஜித் அண்மைகாலமாக ஆக்சன் படங்களிலேயே பெரிதும் தேர்ந்தெடுத்து வருகிறார் இந்த இரண்டு பேரும் ஒரு படத்தில் இணைவதால் படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பது கணிக்க முடியாமல் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் படம் இப்படித்தான் இருக்கப் போவதாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறி உள்ளது.
“அஜித் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்” திரையிலும் சரி, வெளி உலகிலும் சரி அவர் ஒரு சிறந்த மனிதர் நான் எனது இயக்குனர் பயணத்தில் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறேன் அவரின் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளேன் படத்தை எனக்கு பிடித்த படியும், மக்களுக்கு பிடித்த படி சிறந்த பொழுதுபோக்கான படமாக இயக்க விரும்புகிறேன் என பேசி உள்ளார்.