இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படங்கள் மரண ஹிட் அடித்துள்ளது. அதிலும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றுள்ளன.
ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியடைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பல முன்னணி நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் கடைசியாக இயக்கிய அசுரன் திரைப் படத்திற்கு தேசிய விருது வாங்கியது தான்.
அதுமட்டுமில்லாமல் அசுரன் திரை படத்தில் நடிப்பதற்காக நான்கு முன்னணி நடிகர்களுடன் வெற்றிமாறன் பேச்சுவார்த்தை நடத்தியதும் ஆனால் அவர்கள் இதுபோல் கதையில் நடிக்க முடியாது என மறுத்து விட்டதால் கடைசியாக தான் தனுஷ் அவர்களை அணுகினார் வெற்றிமாறன்.
ஆனால் அந்த நான்கு முன்னணி நடிகர்களும் அசுரன் திரைப்படம் தேசிய விருது வாங்கியதால் அய்யய்யோ தப்பு பண்ணிட்டேனே என தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார்கள். மேலும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. தளபதி 65 ஆவது திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு அடுத்தது யார் திரைப்படத்தில் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.
அது மட்டுமில்லாமல் பல முன்னணி இயக்குனர்களின் லிஸ்டும் அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் அசுரன் திரைப்படத்தை சிறப்பாக இயக்கியதற்காக தேசிய விருதைப் பெற்ற வெற்றிமாறன் விஜய்யை வைத்து விரைவில் படத்தை இயக்கயிருக்கிறேன் என உறுதியாக கூறியுள்ளார் ஒரு பேட்டியில்.
அதாவது தற்போது வெற்றிமாறன் சூரி நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதனைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்கயிருக்கிறார் இந்த இரண்டு திரைப்படங்களையும் முடித்தபிறகு விஜய்யை வைத்து இயக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் வெற்றிமாறன் அந்த பேட்டியில் உறுதியாக விஜயின் திரைப்படத்தை இயக்குவேன் என கூறியதுதான் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.