விஜய்யுடன் விலகி இருக்கிறேன்.. அஜித் நட்பு பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் – மனம் திறந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்..!

ajith
ajith

ஆர்வமும், திறமையும் இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய முடியும் அந்த வகையில் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார் ஆரம்பத்திலேயே பல வெற்றி படங்களை குவித்தார் இதனால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்.

தற்போது படங்களில் ஹீரோவாக நடிப்பது மறுபக்கம் படங்களை தயாரித்து ரிலீஸ் செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் இதனால் அவருக்கு இரண்டு பக்கமும் நல்ல காசு வருகிறது இது தவிர அவர் எம்எல்ஏவாகவும் மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்தாலும் பல புதிய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.  அந்த வகையில்  மாமன்னன், கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் பெரிதாக எதிர்பார்க்கப்படுவது படம் கலகத் தலைவன் தான் ஏனென்றால் தடம் படத்தை இயக்கிய மகிழ்த்திருமேனி இந்த படத்தை எடுத்துள்ளார்.

படமும் வெகு விரைவிலேயே வெளிவர  இருக்கிறது. இந்த படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்தைப் பற்றி அவர் பல விஷயங்களை பகிர்ந்தாலும் நிரூபர்கள் உதயநிதியிடம் கேட்கும் முதல் வார்த்தை துணிவு படம் தான் எப்பொழுது ரிலீஸ் எத்தனை திரையரங்குகள் கைப்பற்றி உள்ளது  என்பதை தான் கேட்கிறார்களாம் அதற்கு அவரும் பதில் கொடுத்து வருகிறார்.

அண்மையில் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது உறுதியா என கேட்டனர் அதற்கு அழுத்தம் திருத்தமாக துணிவு படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகுவது உறுதி என கூறினார். மேலும் நிருபர்கள் நீங்கள் விஜயின் தீவிர ரசிகராக இருந்தவர். அவரை வைத்து படம் கூட தயாரித்திருக்கிறீர்கள் அதுபோல அஜித்துடன் நட்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார் அதில் அவர் சொன்னது..

அஜித்துடன்  பழகும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை ஆனால் எனது தம்பி தயாநிதியின் திருமணத்தில் அஜித் நீண்ட நேரம் கலந்து கொண்டார் காரணம் மங்காத்தா திரைப்படத்தை தயாநிதி தான் தயாரித்திருந்தார் அப்பொழுது அவருடன் நேரம் செலவிட முடிந்தது அவருடைய அந்த பிரெண்ட்ஸ் தான் என்னை வியக்க வைத்தது விஜய்யுடன் தற்சமயம் சற்று விலகி இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.