Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசன்னாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஆறு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 7 வது சீசன் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது அதற்கான ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது.
இந்த சீசனையும் வழக்கம்போல உலக நாயகன் கமலஹாசன் தான் சீரும்சிறப்புமாக தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவர் ஒரு பெரிய சம்பளத்தை வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது. பிக்பாஸ் 7 வீடு போல் இல்லாமல் இந்த தடவை இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட உள்ளதாம்.
இந்த சீசனில் மொத்தம் 18 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். வழக்கம்போல சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலங்களை இழுத்து போட பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. அந்த பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல நடிகை தானாகவே முன்வந்து நானும் பிக்பாஸ் 7 இல் இருக்கிறேன் என சொல்லி பிக்பாஸ் 7 -க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க வைத்துள்ளார்.
பிக் பாஸ் 1 -ல் தனக்கு தெரிந்ததை விளையாண்டு ரசிகர்கள் பிரபலமடைந்து தனக்கென ஒரு ஆர்மியை உருவாக்கியவர் ஓவியா இவர் தான் பிக்பாஸ் 7 -னில் கலந்து கொள்ள இருக்கிறாராம் இது குறித்த அவர் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் சொன்னது.. விஜய் டிவி தன்னை அழைத்துள்ளனர் இன்னமும் அதற்கு போவதால் அல்லது வேண்டாமா என்கின்ற முடிவை நான் எடுக்கவில்லை என கூறினார் இதை பார்த்த ரசிகர்கள் தலைவி தயவு செஞ்சு வாங்க.. வந்து ஒரு வாரம் வீட்டில் இருந்து விட்டு போங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.