அஜித்தின் விடாமுயற்சியில் நானும் இருக்கேன்.? பிரபல நடிகர் போட்ட பதிவு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ajith-

நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், அதை எல்லாம் பெரிதாக எதுக்கொள்ளாமல் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியிட துணிவு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தான் “விடாமுயற்சி”.

இந்த படத்தின் டைட்டிலை அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கிய சீக்கிரம் முடியும் என கூறப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி திரைப்படம் இந்த வருடத்தின் இறுதி அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்திற்கு அனிருத் திரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா  ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க மறுபக்கம்  அஜித்தின் உலக சுற்றுப்பயணம் குறித்த ஆவணப் படத்தை பிரபல OTT நிறுவனமான நெட்பிக்ஸ் தயாரிக்க இருக்கிறது அதற்கான உரிமத்தை பெற்றிருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது விடாமுயற்சி..

திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள் நிதி போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் பிரபல நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் I AM GAME என பதிவிட்டுள்ளார் அந்த நடிகர் வேறு யாரும் அல்ல.. நடிகர்  அருண் விஜய் தான். இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் அருண் விஜய் தான் வில்லன் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த தகவல் வைரலாகி வருகிறது.