தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும் ரஜினியின் நம்பர் 1 இடத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என மும்முரமாக சினிமாவில் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். அதனால் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதால் அவர்களின் ரசிகர்கள் பட்டாளமும் உலக அளவில் உயர்ந்து கொண்டே செல்கின்றன.
இருப்பினும் ரஜினியின் இடத்தை பிடிக்க விஜய்க்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது காரணம் தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுக்கிறார் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 கோடிக்கு மேல் வசூல் அடைவதால் அந்த இடத்தை இவர் மட்டுமே நெருங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்காக விஜய் ஓடிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் அவருடைய 65 வது திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு பட நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார் மேலும் இந்த படத்தில் பல ஜாம்பவான்கள் இணைந்துள்ளதால் தற்பொழுது படம் வேற லெவல் இருக்கும் என ரசிகர்கள் தற்போதைய கணக்கு போட்டு உள்ளனர்.
படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சிறப்பாக முடிந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழுவுக்கு செம அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொரோனா தொற்று. இதையடுத்து படக்குழு தற்காலிகமாக ஷூட்டிங்கை தள்ளி வைத்துள்ளது.
இந்த படத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகின அது உறுதிப்படுத்த படாமல் இருந்ததால் ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்புகொண்டு கேள்விகளை கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது.
ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் உரையாடும்போது அண்ணா நீங்கள் தளபதி 65 வது படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டதற்கு yesppa நடிக்கிறேன் என கூறி உள்ளார். இச்செய்தியை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வேகமெடுத்து உள்ளதோடு தளபதி ரசிகர்களை கொண்ட செய்துள்ளது.