நான் உயிருடன் தான் இருக்கிறேன்.. மூன்று மாதங்கள் மோசமான நாட்கள் என கண்ணீர் மல்க பேசிய நடிகை சமந்தா.!

samantha
samantha

தமிழ் சினிமாவின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் சில தினங்களுக்கு முன்பு தனக்கு மையோசிடிஸ் என்னும் அரியவகை நோய் இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் தெரிவித்து இருந்தார்.

மேலும் மிகவும் மோசமான நாட்களை அனுபவித்து வருவதாகவும் மனம் உடைந்து கூறிய அவருடைய பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலானது இதனை பார்த்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் விரைவில் சமந்தா உடல் நலம் சரியாகி வருவார் என ஆறுதல் கூறி வந்தார்கள். மேலும் சமந்தாவிற்கு தைரியத்தை ஊட்டும் வகையில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவின் மூலம் தெரிவித்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமந்தா நீண்ட மாதங்களுக்குப் பிறகு தற்பொழுது சோசியல் மீடியாவிற்கு வந்திருக்கிறார். அதாவது இவருடைய நடிப்பில் தற்பொழுது யசோதா திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. அதாவது வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி அன்று பல திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகை சமந்தா குறித்த வீடியோ தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை சமந்தா பல மாதங்களுக்குப் பிறகு பேட்டி அளித்திருக்கும் நிலையில் அதில் எலும்பும், தோலுமாக மாறி இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கருப்பு நிற உடையில் கண்ணில் கண்ணாடி போட்டு கொண்டு மிகவும் சோர்வுடன் பேசி இருக்கும் நிலையில் இதனை பார்த்த பலரும் நடிகை சமந்தாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

மேலும் சமந்தா இந்த பேட்டியில் யசோதா திரைப்படத்தைப் பற்றி கூறியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய உடல் நலப் பிரச்சினை குறித்தும் பேசியிருக்கிறார் அதாவது அவர் நான் ட்விட்டரில் தெரிவித்தது போன்று எனக்கு மோசமான நாட்களும் நல்ல நாட்களும் இருந்தது ஆனாலும் நான் உயிருடன் தான் இருக்கிறேன் இந்த மூன்று மாதங்களும் மருந்து, மாத்திரைகள், டிரிப்ஸ் என்று நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டேன்.

என்னுடைய உடல் நிலையை பற்றி என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கு தெரிய வேண்டுமென்று நான் நினைத்தேன் அதே சமயம் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னை பலவீனப்படுத்தி விடுமோ என்றும் பயந்தேன் என அவர் கண்ணீருடன் பேசி இருந்தார். எனவே இதனைப் பார்த்த பிரபலங்கள் பலரும் நீங்கள் இவ்வாறு அழுக கூடாது என ஆறுதல் கூறி வருகிறார்கள்.