திரௌபதி, ருத்ர தாண்டவம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் வெளிகாட்டி கொண்டவர் மோகன் ஜி. முதலில் இவர் பழைய வண்ணாரப்பேட்டை என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதன் பிறகு அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து திரௌபதி படத்தை முதலில் எடுத்தார்.
இது சாதி படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது உடனேயே இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து “ருத்ர தாண்டவம்” என்னும் படத்தை எடுத்தது இந்த படமும் நல்லா வரவேற்பை பெற அடுத்ததாக செல்வராகவனுடன் கூட்டணி அமைத்து பகாசூரன் என்னும் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
படம் நாளை கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இதுவரை மோகன் ஜி – யை எல்லோரும் சாதி படம் எடுப்பவர் என சொல்லி வருகின்றனர் ஆனால் பகாசூரன் படத்திற்கு பிறகு அந்தப் பெயர் மறைந்துவிடும் என மோகன் ஜி நம்பிக்கையில் இருக்கிறார். இந்த நிலையில் மோகன் ஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து விலாவாரியாக பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அஜித்தின் தீவிர ரசிகன் நான்.. அவங்க வீட்டு விசேஷத்துக்கு சென்றால் நிச்சயம் தல உடன் ஒரு போட்டோ எடுக்கணும்னு தோணும் அப்படி செய்தால் இங்கே இருக்கிறவனுங்க பேசுவாங்களோ என்கின்ற பயத்தாலயே அஜித் சார் கூட போட்டோ எடுக்கவும் இல்லை அவர் வீட்டு விசேஷத்திற்கும் போவதில்லை என கூறி இருக்கிறார்.
திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்திற்கு பிறகு சாதிய படங்களை எடுப்பவன் என பலரும் விமர்சித்தனர் இந்த நிலையில் தான் செல்வரகவன் சாருக்கு பகாசூரன் கதையை சொல்லி கமிட் பண்ணினேன் அப்பொழுது பல ட்ரோல்கள் வந்தன இதனால் நான் படத்தை கைவிடலாம என முடிவு செய்தேன் ஆனால் செல்வராகவன் சார் எனக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார் நிச்சயம் பகாசூரன் படத்திற்கு பிறகு எல்லாமே மாறும் அதன் பிறகு அஜித் சார் உடன் இணைந்து போட்டோ எடுப்பேன் அவரை வைத்து படம் எடுக்கவும் ஆசையாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.