Kayal anandhi : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கயல் ஆனந்தி. இவர் கிராமத்து கதையை அம்சம் உள்ள படங்களில் சிறப்பாக நடிக்க கூடிய ஒரு ஆள்.. பொறியாளன் படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பிறகு கயல், சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா..
விசாரணை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் கடைசியாக சாந்தனு நடிப்பில் உருவான ராவணக்கோட்டம் படத்தில் ஹீரோயின்னாக நடித்து இருந்தார் இந்த படத்தின் ஷூட்டிங் போது தான் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
மின்னலடி இதுதானா.. கிரிக்கெட்டில் சிக்ஸர் அதிகமாக அடித்த 5 நட்சத்திர வீரர்கள்.!
சிட்டியை தள்ளி ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது இரவு படப்பிடிப்பு முடிந்த பிறகு சிட்டிக்கு சென்று ஹோட்டலில் தங்கி விட்டு மீண்டும் காலையில் எழுந்து குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவது ரொம்ப கடினம் அதேபோல ஷூட்டிங் முடிந்து இரவு நேரத்தில் அந்த சாலையில் போகுவதும் ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு அனைவரும் படப்பிடிப்பு நடந்த அந்த ஊரிலேயே தங்கினோம் நான் கேரவனில் தங்கிக் கொண்டேன். அங்கேயே தூங்குவது, அங்கேயே குளிப்பது, உடை மாற்றுவது என அனைத்தையும் அங்கேயே செய்து கொண்டேன் படப்பிடிப்பிற்காக கேரவனை என்னுடைய ஹோட்டலாக மாற்றிக் கொண்டேன்.
மின்னலடி இதுதானா.. கிரிக்கெட்டில் சிக்ஸர் அதிகமாக அடித்த 5 நட்சத்திர வீரர்கள்.!
அது புது விதமாக இருந்தது என கயல் ஆனந்தி கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு 90 கால கட்டத்தில் டிரஸ் மாத்த இடம் இல்லாமல் கார் உள்ளே மாற்றுவது, மரத்துக்கு பின்னால் டிரஸ் மாற்றுவது என பல கஷ்டங்களை சந்தித்துள்ளனர். கயல் ஆனந்தி இது ஒரு பெரிய விஷயமா எனக்கூறி கமெண்ட் அடுத்து வருகின்றனர்.