விருப்பம் இல்லாமல் நடித்தேன்.! சம்பளத்தை திருப்பிக் கொடுத்தேன் – மாவீரன் பட நடிகை பேச்சு

saritha
saritha

saritha : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சரிதா.  அப்பொழுது ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன்  நடித்து உள்ளார். இப்படிப்பட்ட இவர்  தனது இரண்டாவது இன்னிங்ஸை இப்பொழுது ஆரம்பித்து படங்களில் நடித்து வருகிறார்.

முதலாவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்தார். படத்தில் இவருடைய சென்டிமென்ட் காட்சி ஒவ்வொன்றும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த அளவிற்கு எதார்த்தமாக நடித்திருந்தார் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவியும் என பலரும் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் சினிமாவில் தனக்கு நடந்த அனுபவத்தை வெளிப்படையாக பேசி உள்ளார். ஒரு படத்தில் நடித்துவிட்டு படம் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் சம்பளத்தை திரும்பிக் கொடுத்த விஷயம் பற்றி பகிர்ந்து உள்ளார். அந்த படம் வேறு எதுவும் அல்ல..

ஊமை விழிகள் படத்தில் நடித்து முடித்துவிட்டு படத்தின் முதல் காபியை நான் ஸ்டூடியோவில் பார்த்தேன் படத்தை பார்த்து முழுவதும் முடித்த பிறகு தான் அந்த படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினேனோ அதே அப்படியே தயாரிப்பாளரிடம் கொடுத்துவிட்டேன் ஏனென்றால் அந்த படம் எனக்கு பிடிக்கவில்லை தயாரிப்பாளரிடம் சார் இந்த படத்தில் நான் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்.

அதனால் எனக்கு பணம் வேண்டாம் இந்தாங்க உங்களுடைய பணம் என கொடுத்து விட்டேன் ஆனால் அந்த படத்தில் என்னுடைய நடிப்பு அருமையாக இருந்தது என சிலர் என்னிடம் சொன்னார்கள் அந்த படத்தை வைத்து தான் எனக்கு பல படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதனை நான் என்றும் மறக்கவே மாட்டேன் ஆனால் ஏனென்று தெரியவில்லை.

அந்த படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது என்ன காரணம் என்று தெரியவில்லை ஆனால் ரொம்ப வருத்தமாக இருந்தது அந்த நேரத்தில் தமக்கு இன்னும் கொஞ்சம் அறிவு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாமே என்று தோன்றியது சரியாக நடக்காதது போல எனக்கு தெரிந்தது. அதற்காகத்தான் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.