காலத்துக்கு ஏற்றவாறு இயக்குனர்களும் தன்னை அப்டேட் செய்து கொண்டு பயணிக்கின்றனர் அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத இளம் தலைமுறை இயக்குனர்கள் பலரும் சினிமா எந்த அளவில் இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு கதையை உருவாக்கி வெற்றிப் படங்களை கொடுக்கின்றனர். மேலும் வெகு விரைவிலேயே டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி விடுகின்றனர்.
யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF படம் உலக அளவில் சூப்பர் டுப்பர் ஹிட் அடித்தது. ஹீரோ யாஷ்க்கு எதிர் பார்க்க வகையில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து கன்னட சினிமா உச்சியில் தூக்கி நிறுத்தினார். இதன் முலம் இந்திய அளவில் பேசும் பொருளாக யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் மாறினர்.
கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை எடுத்த பிறகு பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்கு ஏற்ற நடிகர், நடிகைகளை சரியாக தேர்வு செய்து படத்தை எடுத்து வருகிறார்
அந்த வகையில் சலார் படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக யார் போடுவது என பலரை தீர்மானித்து வைத்திருந்த பிரசாந்த் நீல் தற்பொழுது ஹிந்தி சினிமாவில் ஹீரோ வில்லனாக நடித்து வந்த பிரபலம் ஜான் அபிரகாம் என்பவர் கமீட் செய்ய பேச்சு வார்த்தை நடத்துகிறது.
இவர் நிச்சயம் ஹீரோ பிரபாஸுக்கு ஏத்த வில்லனாக இருப்பார் என பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் ரோல் கொடுக்கிறாரோ அதுபோல வில்லனுக்கும் சிறப்பான ரோலை கொடுத்து அழகு பார்ப்பது வழக்கம்.
அதுவே இந்த படத்திலும் பக்கபலமாக நிச்சயம் அமையும். மேலும் இந்த திரைப்படம் பலருக்கும் விருந்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சலார் படம் தற்போது கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது மேலும் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.