தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் டப்பிங் காட்சிகள் மற்றும் பிரமோஷன் பணிகல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் குமார் அவர்கள் ஹெச் வினோத்துடன் இணையும் துணிவு திரைப்படம் தற்போது முடிவடைந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் துணிவு படத்தின் இயக்குனர் ஹச் வினோத்.
இந்த நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது ஃபர்ஸ்ட் சிங்கள் குறித்து இயக்குனர் ஹச் வினோத் அவர்கள் தனது ட்ரேடர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதாவது துனிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சில்லா சில்லா என தொடங்கும் இந்த பாடலை அனிருத் அவர்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது துணிவு படத்தின் இசையமைப்பாளருடன் அனிருத் இருக்கும் புகைப்படம் அன்மையில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து துணிவு படத்திலிருந்து ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த படம் பொங்கலில் வெளியாக உள்ளதாகவும் எச் வினோத் அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதே தினத்தில் தளபதி விஜயின் வாரிசு படமும் வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாக இருக்கிறது இந்த இரண்டு படங்களும். இதில் எந்த படம் வெற்றி அடையும் என்று குழப்பத்தில் உள்ளனர்.
சில வருடங்கள் கழித்து விஜய் அஜித் படங்கள் மோத உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் அது மட்டுமல்லாமல் விஜய் அஜித் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு பெரிய விருந்து இருக்கிறது என கூறப்படுகிறது.
No Guts No Glory #Thunivu #ChillaChilla Coming very Soon 🔥 #AjithKumar sir 🔥 pic.twitter.com/O20ZqAOsi1
— HVinoth (@HVinothDirOffl) November 10, 2022