நடிகர் அஜித் தொடர்ந்து சிறப்பான இயக்குனர்களிடம் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹச். வினோத் உடன் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி உள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது தெரியாமல் இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத்தின் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டாராம் அஜித் தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை மீண்டும் ஹச். வினோத் இயக்கவுள்ளார் போனி ஒவ்வொரு பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை எடுக்க இருப்பதாக தெரிய வருகிறது இந்த படத்தின் பூஜை வருகின்ற 16 ம் தேதி பிரமாண்டமாக போட இருக்கிறதாம்.
ஆனால் ரசிகர்கள் மனதில் இப்போது இருக்கும் ஒரே ஒரு கேள்வி வலிமை திரைப்படத்தை நீங்கள் ரிலீஸ் செய்துவிட்டு பூஜை போட்டு இருந்தால் எங்களுக்கு சந்தோஷம்தான் பல வருடங்களாகக் வலிமை படத்துக்கு காத்து கிடக்கும் நிலையில் அந்தப் படம் வெளிவரவில்லை அதற்குள் அடுத்த படமா..
வலிமை படம் பிரச்சனைகளை எல்லாம் தாண்டி சிறப்பாக வெளிவரும் என படக்குழுவினர் நம்பிக்கை இருக்கிறது. அதற்காக அடுத்த படத்தை எடுக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு என நினைத்து அஜித்தின் 61- வது படத்தை தீபாவளிக்கு கொண்டு சேர்க்கப்படுகிற அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாம் இந்தப் படத்தின் பூஜை போட்ட பிறகு பிப்ரவரி 3 – ம் தேதி இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் சில இடங்களில் நடத்தப்பட்டு பின் ஹைதராபாத்தில் படம் விறுவிறுப்பாக எடுக்கப்படும் என தெரியவருகிறது.
வெற்றிகரமாக சூட்டிங்கை முடித்து உடனடியாக படத்தை தீபாவளிக்கு கொண்டு சேர்க்க இருப்பதாக தெரிய வந்துள்ளது இந்த படத்தில் இசையமைப்பார் யார் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் அஜித்தின் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்தாலும் வினோத்திற்கும் யுவனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததன் காரணமாக இடையிலேயே ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்த தகவல்கள் உலா வருகின்றன. ஆனால் 61 வது திரைப்படத்திற்கும் யுவன் கிடையாதாம் ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.