நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத் உடன் கைகோர்த்து வலிமை என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மூன்றாவது முறையாகவும் ஹச் வினோத் உடன் கைகோர்த்து தற்போது தனது பெயர் வைக்கப்படாத 61வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் படத்தை கூடிய விரைவிலேயே முடிக்கப்பட்டு வருகின்ற தீபாவளி அன்று வெளியிட படக்குழு தயாராக உள்ள நிலையில் படப்பிடிப்பு முழு ஈடுபாட்டுடன் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், சமுத்திரகனி, நடிகர் வீரா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப்படம் ஒரு வங்கிக் கொள்ளை கதையை மையமாக வைத்து உருவாகி வருகின்றது என ஏற்கனவே தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் வைரல் ஆகியது அதையடுத்து தற்போது AK 61 படத்தின் புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதன்படி வங்கிக் கொள்ளை போன்ற கதையை வைத்து உருவாகி வரும் இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் கதையை ஹெச் வினோத் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது