தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் முதலில் சிம்பு மற்றும் வரலட்சுமியை வைத்து போடா போடி என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர். கடைசியாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் காமெடி கலந்த ஒரு காதல் படத்தை எடுத்திருந்தார்.
இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து அஜித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஏ கே 62 திரைப்படத்தை எடுக்க உள்ளார் என தகவல்கள் எல்லாம் வெளியானது அது உண்மை தான்.. முதலில் ஒரு ஒன் லைன் ஸ்டோரியை அஜித்துக்கு சொல்லி இம்ப்ரஸ் பண்ணினார் விக்னேஷ் சிவன்.
ஆனால் முழு கதை சொல்லும் பொழுது அது அஜித் லெவலுக்கு இல்லாததால் அவரை ஏகே 62 படத்தில் இருந்து தூக்கின இதனை அடுத்து ஏ கே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. AK 62 படத்திலிருந்து தூக்கியதால் விக்னேஷ் சிவன் முதலில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் புகைப்படத்தை ரிமூவ் செய்தார் சில பதிவுகளை போட்டு அஜித் ரசிகர்களை கடுப்பேற்றினார்
இப்படி இருக்கின்ற நிலையில் தற்போதும் ஒரு புதிய பதிவை போட்டு மீண்டும் அஜித் ரசிகர்களை சீண்டி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி..
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்றுத் தருவதை விட தோல்வியும் அவமானமும் நமக்கு நிறைய கற்றுத் தருகிறது எனக் கூறியுள்ளார் இதைக் கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் ஏ கே 62 படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைக்காததால்தான் அஜித்தை இவர் மறைமுகமாக தாக்குகிறார் என கூறி பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்