தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜீத் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விவேகம், விஸ்வாசம், நேர்கொண்டபார்வை போன்ற திரைப்படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
இந்த நிலையில் தற்போது அஜித் ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி திரைக்கு வர காத்திருக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹீமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ், ஜி எம் சுந்தரம், சைத்ரா ரெட்டி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த வலிமை திரைப்படம் வேற லெவலில் உருவாகி வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. மேலும் இந்த படத்தின் இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளரும் படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் எனவும் ஆசை படுகின்றன.
அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதியன்று திரையரங்கில் வலிமை ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடித்துள்ளார். அவர் தற்போது அஜித் குறித்து ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியது, அஜித் ஒரு ஜென்டில்மேன் அவர் ஒரு மிகப் பெரிய ஸ்டார் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் அவர் கடின உழைப்பாளி மற்றும் டெமாக்ரசி. மேலும் அவரிடம் யார் யோசனை கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்வார் அவருடன் பணியாற்றியது மற்றும் அவருடன் நேரம் செலவிட்டது எனக்கு அற்புதமான நிகழ்வு எனவும் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் எனவும் ஹீமா குரேஷி அஜித்தை பற்றி தெரிவித்துள்ளார்.