இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வந்த நிலையில் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் ஆவலாக எதிர்பார்த்தனர்.
அந்தவகையில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியாகின மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையிலும் நேற்று விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்தபோது எனக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9 மகாபலிபுரத்தில் குடும்பங்கள், நெருங்கிய நண்பர்கள் முக்கிய பிரபலங்கள் மத்தியில் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் திருமண வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்களது திருமணத்தில் அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், முதல்வர் முக ஸ்டாலின் போன்ற முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்துகொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியது.
இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது இவர்களது திருமணத்தை மிகவும் அழகாக காண்பிக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்றுள்ளார் இந்தநிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்காக மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரையில் கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கி கவுஷல் – கத்ரீனா கைஃப் மற்றும் விராட் கோலி – அனுஷ்கா போன்றவர்களின் திருமணத்தில் பணியாற்றிய ஏற்பாட்டாளர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண ஏற்பாட்டை கவனிக்க உள்ளனர்.