சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்..! நடிகர் நாக சைதன்யா பேட்டி.

naga-chaitanya
naga-chaitanyanaga-chaitanya

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் இதுவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஒரு சமயத்தில் தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவில் நல்ல படங்களில் நடித்து அங்கேயும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இதனால் தென் இந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக இவர் மாறினார். சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடங்கள் இருவரும் நன்றாக தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் ஆனால் சின்ன சின்ன பிரச்சனை ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்து பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் மேலும் படங்களிலும் தனித்தனியாக நடித்து வருகின்றனர்.

ஆனால் பேட்டிகள் என்று வந்துவிட்டால் இருவரும் மற்றவரைப் பற்றி பேசிக் கொள்கின்றனர் அந்த வகையில் நாக சைதன்யாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்னது சமந்தாவை நான் நேரில் பார்த்தால் ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடித்து விடுவேன் என கூறினார் மேலும் உங்கள் கையில் இருக்கும் டாட்டூ என்ன அர்த்தம் என கேட்டுள்ளனர்.

அது தன் திருமண நாள் என்று கூறினார் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் தனக்கு வரவில்லை என கூறினார். இருவரும் விவகாரத்து பெற்று இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மாத்தி மாத்தி புகழ்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.