பிரம்மாண்டமான பாகுபலி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.. அட ராஜமவுளின் சாய்ஸ் இவர்களா..

Baahubali
Baahubali

Baahubali: ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பாகுபலி இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் ராணா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் ஆனால் ராஜமவுலி முதலில் தேர்வு செய்தது வேறு இரண்டு பிரபலங்களை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருந்து வரும் பாகுபலி தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறார். மேலும் இவருடைய இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது எனவே இதனால் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

இணையதளத்தில் லீக்கான தளபதி 68 படத்தின் டைட்டில்.? இங்கிலீஷ் பேரா இருக்கு..

அப்படி 2015ஆம் ஆண்டு வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் பாகுபலி. இந்த படத்தில் மகிழ்மதியின் அரசன் அமரேந்திர பாகுபலியாக இரட்டை கதாபத்திரத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். இவரை அடுத்து வில்லனாக பல்வாழ் தேவன் என்கின்ற கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடித்திருந்தார். மேலும் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்தியராஜ், நாசர், தமன்னா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் இக்கால இளம் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் பாகுபலி தி பிகினி என்ற தலைப்புடன் 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டாவது பாகம் 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 தி கன்குலேஷன் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை சந்தித்தது.

மேலும் இப்படத்தில் நடித்த அனைத்து கதாப்பத்திரங்களும் உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் பிரபாஸ் வெற்றி நாயகனாக இப்படத்தின் மூலம் திருப்புமுனையை அடைந்தார் அதன் மூலம் தனது சம்பளத்தையும் எக்கச்சகமாக உயர்த்தி உள்ளார். இவ்வாறு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி கதாபாத்திரத்தில் முதலில் வேறு நடிகர்களை தான் ராஜமவுலி தேர்வு செய்துள்ளார்.

எஸ்.கே.ஆர் பாக்க போனப்ப பின்னாடியே அவளை அனுப்பிவிட்டது நீதானே.. ஈஸ்வரியை பொளந்து கட்டும் குணசேகரன்..

அதாவது பாகுபலி கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க முயன்றுள்ளார் அதேபோல் ராணா கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாமை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் ஆனால் ரித்திக் ரோஷன் மற்றும் ஜான் ஆபிரகாம் இவர்களை சந்தித்து சில முறை கதை கூறியும் ஆனால் சில காரணங்களால் இவர்களால் நடிக்க முடியாமல் போனது கால்ஷீட் கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு சுமார் இரண்டு வருடங்கள் கழித்து வேறு வழி இல்லாமல் பிரபாஸ் மற்றும் ராணா இருவரையும் வைத்து பாகுபாலி படத்தை உருவாக்கினாராம் ராஜமவுலி.