தமிழ் சினிமா உலகில் ஒரு சிலர் மட்டுமே மேக்கப் போடாமல் நடித்தால் கூட அழகாக இருப்பார்கள் அந்த வகையில் அரவிந்த்சாமி அஜித் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். அஜித் பல படங்களில் மேக்கப் போடாமல் வெறும் மூஞ்ச மட்டுமே கழுவிட்டு படத்தில் நடித்துள்ளார் என பல நடிகர் நடிகைகள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்த அளவிற்கு மிகவும் அழகாக இருப்பாராம் அஜித். இந்த காரணத்தினால் தான் ரசிகர்கள் அஜித்தை பின்பற்றுகிறார்கள் என்றால் இல்லை அஜித் சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எப்பொழுதும் ஒரே மாதிரியான எண்ணம் கொண்டவர் அவரது சினிமா மற்றும் அவரது நடத்தை ஆகியவை சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.
ரசிகர்களுக்கு ஏற்றார்போல அஜித்தும் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் இதனால் அஜித்தின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுதுகூட நடிகர் அஜித்குமார் தனது அடுத்தடுத்த திரை படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் அஜித்தின் 61ஆவது திரைப்படத்தை ஹெட்ச் வினோத் இயக்கவுள்ளார் இந்த படத்திற்காக நடிகர் அஜீத் குமாரும் அதிரடியாக உடல் எடையைக் குறைத்து தற்போது படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அஜித்துடன் தீனா படத்தில் நடித்த லைலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது அவர் தீனா படத்தில் நடிக்கும்போது அவ்வளவு அழகாக இருப்பார் அதே போலவே தான் தற்போதும் அவ்வளவு அழகாக இருக்கிறார் இன்னும் அந்த அழகு அவருக்கு மாறவே இல்லை என அஜித்தை பற்றி புகழ்ந்து பேசி தள்ளியுள்ளார்.