கொரோனா வைரஸ் பரவாமல் எப்படி நம்மளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.! நடிகை திரிஷா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.!

trisha-corona
trisha-corona

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா, இவர் சூர்யா நடிப்பில் வெளியாகிய மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

தற்போது உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் மத்திய அரசு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் வீடியோக்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷாவும் யுனி செப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் எப்படி பரவாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என அலைபேசி எண்களை கூறியுள்ளார்.