இணையதளத்தில் அதிகம் தேடப்படுவது!! ஆன்லைனில் மதுபானங்களை ஆர்டர் செய்வது எப்படி?

liquor1-tamil360newz
liquor1-tamil360newz

How to order liquor in online: கொரோனா வைரஸின் காரணமாக  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள்,  திரையரங்குகள்,  வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மதுக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

மேலும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திறந்து வைத்தனர். மதுப் பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக விலகலை சரியாக கடைப்படிக்காமல்  இருந்ததால் மீண்டும் மது கடைகள் மூடப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகள் திறப்பதனால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் இருப்பதாக எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயர்நீதிமன்றம் மதுக்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்ககப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மீறி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மதுபிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளார்கள். இந்த நிலையில் மதுபிரியர்கள் ஆன்லைனில் எப்படி மதுபானங்களை ஆர்டர் செய்வது என்று இணையதளத்தில் தேடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல்  உணவு பொருட்களை ஆர்டர் செய்வது போன்று  ஸ்விகி, ஜொமோட்டோ போன்றவற்றில் மதுபானங்களை ஆர்டர் செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு உயர் நீதிமன்றம்  அறிவித்த ஆணையின்படி, ஆன்லைனில் மதுபானங்களை விற்பனைசெய்ய முடிவு செய்தால், அதற்கான முழு விபரங்களையும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுப் பிரியர்கலின் இந்த சந்தேகங்களைத் தீர்க்க தமிழக அரசு ஏதேனும் ஒரு முடிவினை எடுக்குமாறு மது பிரியர்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறார்கள்.