“சந்திரமுகி 2” படம் எப்படி இருக்கு தெரியுமா? வெளிவந்த முதல் விமர்சனம்

chandramukhi 2
chandramukhi 2

chandramukhi 2 : சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த டிராக்கில் ஓடுவார்கள் அப்படி பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் காதல் சமந்தப்பட்ட படங்களில் நடித்து இருந்தாலும் பேய் சம்பந்தமான படங்கள் தான் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தன அதனாலேயே அந்த டிராக்கிலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் முனி என்னும் பேய் படத்தில் நடித்தார் அதனால் அதனைத் தொடர்ந்து காஞ்சனா சீரிஸ் படங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போதும் பேய் சமந்தமான படம் பண்ணி வருகிறார். சந்திரமுகி பார்ட் 2 பாகத்தில் நடித்து வருகிறார் படத்தை பி வாசு இயக்கி வருகிறார்.

லைகா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுத்து வருகிறது படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்து வருகிறார். ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமிமேனன், kangana ranaut, subiksha, டி எம் கார்த்திக் சீனிவாசன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறனர்.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தை முழுவதையும் பார்த்துவிட்டதாக இசையமைப்பாளர் கீரவாணி தனது டுட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது.. இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள் நான் கடந்த இரண்டு மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்.

என கீரவாணி கூறி உள்ளார். இதனால் சந்திரமுகி 2 படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது முதல் பாகம் போலவே இந்த படமும் மிரட்டும் என  பலரும் நம்பி இருக்கின்றனர்.