தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் சூரி. முதலில் இவர் “வெண்ணிலா கபடிக்குழு” என்னும் திரைப்படத்தில் காமெடியன்னாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு இவர் நல்ல படங்களில் மட்டுமே நடித்ததால் இவர் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி, சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக்கொண்தார்.
தொடர்ந்து இவர் காமெடியன்னாக வெற்றி கண்டு வந்த நிலையில் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் அதுவும் முதல் படமே வெற்றிமாறனுடன் இவர் கைகோர்த்து நடித்துள்ளதால் சூரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது முதல் பாகம் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தில் சூரி உடன் இணைந்து விஜய் சேதுபதி, சேத்தன், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர், பவானி ஸ்ரீ மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் விடுதலை திரைப்படம் உருவாவதற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து பார்போம்..
முதன் முதலாக சூரிக்கு கதை கூறிய போது காரைக்குடியில் நடக்கும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கூறி இருக்கிறார் பின்னர் சிறிது நாட்கள் கழித்து அந்த கதை படமாக்கப் எடுக்க வேண்டாம் வேறு ஒரு கதை என்னிடம் இருக்கிறது. துபாயில் நடக்கும் கதை எனக் கூறி உள்ளார்.
பிறகு இரண்டு வருடங்களுக்கு எந்த ஒரு தகவலும் அளிக்காமல் இருந்து உள்ளார் வெற்றிமாறன் ஒரு வழியாக 2020 துபாயில் படத்தை எடுக்கலாம் என கூறி உள்ளாராம் ஆனால் அந்த சமயத்தில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த படத்தை கைவிட்டு விட்டார் வெற்றிமாறன். கடைசியாக விடுதலை படத்தின் கதைக்கு ஓகே சொல்லி படமாக எடுக்கப்பட்டதாம்..