அண்மை காலமாக சினிமா உலகை மாடல் பிரபலங்கள் தான் ஆட்சி செய்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் 90 காலங்களிலேயே மாடல் அழகிகள் சினிமா உலகை ஆட்சி செய்துள்ளனர். அந்த பிரபலம் வேறு யாருமல்ல.. ஐஸ்வர்யா ராய் தான். உலக அழகியான பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு இந்திய அளவில் பட வாய்ப்புகள் குவிந்தது.
குறிப்பாக பாலிவுட்டில் எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த வகையில் ஷாருக்கான், ரித்திக் ரோஷன், அமீர்கான், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் போன்றவர்களுடன் நடித்து அசத்தியுள்ளார். இதனால் உலக அழகி ஐஸ்வர்யாவின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது.
இப்பொழுது ஐஸ்வர்யா ராய் பெருமளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் டாப் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். தற்போது பதினொரு வயதில் ஐஸ்வர்யாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். பெரிதும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார். தமிழில் ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளவர்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னின் செல்வன் என்ற திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஐஸ்வர்யா ராய் இளம் வயதிலேயே மாடல் அழகியாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஆரம்பத்தில் அதாவது 18 வயதில் விளம்பர படங்களில் நடிக்க வந்தபோது அவருக்கு சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 18 வயதில் மாடலிங் துறையில் விளம்பரத்தில் நடிக்க சுமார் 1,500 ரூபாய் வாங்கியிருக்கிறாராம். அப்பொழுதே எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.