தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் கடந்த சில வருடங்களாக வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், ஜான் கொக்கேன், ஜி எம் சுந்தர், பாவனி ரெட்டி, சமுத்திரக்கனி, வீரா, அஜய், பால சரவணன், பிரேம், பகவதி பெருமாள், மோகனசுந்தரம், கே ராஜன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் சூப்பரான நடித்திருந்தனர்.
படம் முழுக்க முழுக்க நல்ல மெசேஜ், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்தது படத்தை ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடினர் முதல் வாரம் கடந்த பிறகு குடும்ப ஆடியன்ஸ் இந்த படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்தனர் குறிப்பாக பெண்களுக்கு துணிவு திரைப்படம் ரொம்ப பிடித்திருந்தது.
அதன் காரணமாக பட்டிதொட்டி எங்கும் துணிவு படத்தின் வசூலும் அள்ளிக் குவித்தது இதுவரை மட்டுமே 260 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. திரையரங்குகளில் வெற்றி நடை போட்ட துணிவு திரைப்படம் சமீபத்தில் netflix OTT தளத்திலும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியார் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..