போட்ட காசை எடுக்க முடியாமல் திணறும் விக்ரமின் “கோப்ரா” திரைப்படம் – இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

cobra
cobra

சினிமா என்பது ஒரு கலை அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பவர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் விக்ரம் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தயங்காமல் தனது உடல் எடையை ஏற்றியும் குறைத்தும் அதற்கு ஏற்றார் போல நடித்து அசத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதனால ஓ என்னவோ விக்ரமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். நடிகர் விக்ரம் சேது, ஐ, பிதாமகன், அந்நியன் போன்ற படங்களில் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டி இருப்பார் இப்படி சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடினாலும் அண்மை காலமாக விக்ரமுக்கு வெற்றி மட்டும் கிடைக்கவே இல்லை..

அந்த வெற்றியை தட்டிப் பறிக்க சிறந்த இயக்குனர்கள் உடன் நடிகர் விக்ரம் கைகோர்த்து நடித்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் கையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் மற்றும் சில படங்கள் கைவசம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் விக்ரமின் கோப்ரா திரைப்படம் வெளிவந்து வெற்றியை பெற்று தரும் என பலரும் எதிர்பார்க்கப்பட்டனர்.

ஏனென்றால் இந்த திரைப்படத்தில் கமல் ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார் இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் கதை சற்று டல் அடிப்பது மற்றும் நீளமாக இருந்தது ரசிகர்களை சற்று சலசலப்பில் ஆழ்த்தியது மேலும் படத்தின் கதையும் சரியாக கனெக்ட் ஆகவில்லை என ரசிகர்கள் விமர்சனத்தை வைத்தனர் அதனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு நல்ல வசூலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி, ரோபோ சங்கர், கே எஸ் ரவிக்குமார், பாபு ஆண்டனி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்தனர். படம் வெளிவந்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவலும் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் கோப்ரா திரைப்படம் உலகம் முழுவதும் வசூலித்துள்ள தொகை சுமார் 50 கோடி என கூறப்படுகிறது..