தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் காமெடியனாக ஜொலித்த வடிவேலு ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார் அப்படி இவர் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தெனாலி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
இப்படி வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு பிரச்சனையில் சிக்கி நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஒரு வழியாக லைகா நிறுவனம் பிரச்சனையை தீர்த்து வைத்து வடிவேலு தற்போது ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். முதலாவதாக இயக்குனர் சுராஜ் உடன் கைகோர்த்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார்.
இந்த படம் வெளிவந்து மோசமான விமர்சனத்தை பெற்றது அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜுடன் கைகோர்த்து மாமன்னன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் படம் ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.
குறிப்பாக உதயநிதி, பகத் பாஸில் மற்றும் வடிவேலு ஆகியோர்கள் நடித்த காட்சிகள் தொடர்ந்து இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வருவதால் மக்கள் படத்தை பார்க்க அலை மோதுகின்றன அதனால் மாமன்னன் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மட்டுமே இரண்டு நாள் முடிவில் 17 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாமன்னன் படத்தில் நடிக்க வடிவேலு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருடைய சம்பளம் 2 கோடியிலிருந்து 3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. வடிவேலு நடித்த படங்களிலேயே மாமன்னன் படத்திற்காக தான் அதிகம் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.