வசூல் மன்னாக மாறிய தனுஷ்.. 6 நாட்களில் “வாத்தி படம்” அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

vaathi-
vaathi-

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்தை தொடர்ந்து  தனுஷ் வாத்தியாராக நடித்த திரைப்படம் “வாத்தி”. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கினார். படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீசானது.

வாத்தி படத்தில் நடிகர் தனுஷ் உடன் கைகோர்த்து சம்யுக்தா மேனன், சாய்குமார், கென் கருணாஸ், ஆடுகளம் நரேன், சமுத்திரக்கனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். படம் முழுக்க முழுக்க வாத்தியார் மற்றும் கல்வி சமந்தப்பட்ட படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ்சை ஆரம்பத்திலேயே திரையரங்கு பக்கம் இழுத்தது. தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களையும் வந்ததால் வாத்தி படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது ஆம் தமிழை தாண்டி பல்வேறு இடங்களில் இந்த படம் வெற்றிநடை கண்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாத்தி திரைப்படம்.

இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் வாத்தி படம் முதல் நாளே பத்து கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த நாட்களிலும் படத்தின் வசூல் குறையவே இல்லை.. 6 நாள் முடிவில் தனுஷின் வாத்தி திரைப்படம் சுமார் 67 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிச்சயம் 100 கோடியை தொட்டு ஹிட் பட வரிசையில் வாத்தி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு வாத்தி திரைப்படம் நடிகர் தனுஷ்க்கு இது மிகப்பெரிய ஒரு வெற்றிப் படம் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.