பத்து தல திரைப்படத்தில் நடிக்க “ப்ரியா பவானி சங்கர்” வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்

pathu-thala
pathu-thala

திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு பலரும் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதை மட்டுமே ஒரு கொள்கையாக வைத்திருக்கின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகர் சிம்பு இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி இயக்குனராகவும், பாடகர் ஆகவும் இசையமைப்பாளராகவும் நடன கலைஞராகவும் ஓடிக்கொண்டிருக்கிறார்.

அதனால் சிம்புவின் மார்க்கெட் ஒரு பொழுதும் குறைந்ததே கிடையாது இப்பொழுது கூட பத்து தல திரைப்படத்தில் சூப்பராக நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகியுள்ளது

எனவே இந்த படத்தில் அதிக அளவு ஆக்சன் காட்சிகள் இருந்தாலும்.. சென்டிமென்ட், காமெடி போன்றவையும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது என சொல்லப்படுகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார் அவருடன் இணைந்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், அனுசித்ரா, கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், redin kingsley, சென்றாயன், joe malloori..

மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர்.  அண்மையில் இந்த படத்தின் டிரைலர் இசை வெளியீட்டு விழா போன்றவை பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்துள்ளது இதனால் முதல் வாரம் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் பத்து தல திரைப்படத்தில் நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் வாங்கிய சம்பளம் குறித்து வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க சுமார் 70 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.