விடுதலை திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா.? வெளிவந்த பரபரப்பு தகவல்

viduthalai
viduthalai

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் இருக்கின்றனர் ஆனால் ஒரு சிலர் மட்டுமே தோல்வியை கண்டதே கிடையாது அந்த லிஸ்டில் இடம்பெற்று உள்ளவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இவர் முதலில் பொல்லாதவன் படத்தை இயக்கி அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணி அமைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் வேறு நடிகர்களுடன் கைகோர்க்கிறார் அந்த வகையில் தினேஷுடன் கைகோர்த்து விசாரணை படத்தை எடுத்தார் தற்பொழுது விஜய் சேதுபதி, சூரி ஆகியவர்களை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த விடுதலை படத்தில் சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாக நடித்து உள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் ஒரு பிரச்சனையை தான் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது

முதல் பாகம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன அதன்படி இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் படத்தின் ரன்னிங் டைம் 2.30 நிமிடம் ஆகும்.. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 40 கோடி என கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தின் பட்ஜெட் கம்மி தான் ஆனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைந்த பிறகு இந்த படத்தின் பட்ஜெட் அதிகரித்தாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன்  சூர்யாவுடன் வாடிவாசல் மற்றும் தனுஷ் உடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறார் என தகவல்கள் உலா வருகின்றன.