நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளார் . எத்தனையோ பிரபலங்கள் சின்ன திரையில் வந்திருந்தாலும் சிவகார்த்திகேயன் அளவுக்கு யாரும் பிரபலமடையவில்லை என்பது தான் உண்மை. இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான்.
இவர் கடைசியாக நடித்த டான், டாக்டர் இரண்டுமே 100 க்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியை கொடுக்க தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவருடன் கைகோர்த்து பிரின்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்தார் இந்த படமும் வழக்கம் போல காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகியது.
படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சத்யராஜ், சூரி, உக்கரை நாட்டு மாடல அழகியும் நடிகையுமான மரியா, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது.
இருப்பின்னும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று படம் நன்றாக தான் ஓடியது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை வெளிவந்து படம் பத்து நாட்கள் ஆன நிலையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் 10 நாளில் மட்டும் உலகம் முழுவதும் 45 கோடி வசூலித்து இருக்கிறதாம்.
வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் மேலும் இந்த படமும் ஒரு வெற்றிப் படம் என்பதால் தற்போது ஹார்ட்ரிக் வெற்றியை ருசித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்…