நடிகை சினேகா 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சினிமா உலகில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்துகிறார். இப்பொழுது பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சினிமா ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து இவரது வளர்ச்சி அசுர வளர்ச்சியை எட்டியது.
குறிப்பாக அஜீத், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து வெற்றிகளை பெற்று ஓடிக் கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து விலகினார். தற்பொழுது நடிகை சினேகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
இருப்பினும் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மீண்டும் புரிந்து கொண்டு உடல் எடையை அதிரடியாகக் குறைத்து சினேகா நடிக்க தொடங்கியுள்ளார். பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற நடிகைகள் போல் இவரும் தற்பொழுது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு அசத்தி வருகிறார்.
சினேகா தமிழை தாண்டி தெலுங்கிலும் ஓரிரு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அந்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் என்பதால் வேறு வழியில்லாமல் போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மை காலமாக சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்த்து வருகிறோம்.
அதுபோல இப்பொழுது புன்னகை அரசி சினேகா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம். அதன்படி பார்க்கையில் சினேகா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.