இயக்குனர் முத்தையா தமிழ் சினிமாவில் அதிகம் கிராமத்து கதைகளை இயக்கி வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த கொம்பன், மருது, கொடிவீரன், குட்டி புலி போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் முத்தையா இயக்கத்தில் நடித்த நடிகர்களும் அந்த படங்கள் மூலம் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்று ஓடினர்.
இப்படி இருக்கையில் முத்தையா கார்த்தியுடன் இணைந்து கொம்பன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கார்த்தி கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் உருவான படம் விருமன்.
இந்த படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் கார்த்தி உடன் முதல் முறையாக ஹீரோயினாக அறிமுக நாயகி அதிதி ஷங்கர் நடித்துள்ளார் மற்றும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மைனா நந்தினி, சூரி, மனோஜ், சிங்கம் புலி போன்ற பல நடிகர் நடிகைகளும் படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.
படம் வெளிவந்த நாளிலிருந்து திரையரங்கில் ஹவுஸ்புல் ஆக இருந்து வருகின்றன படத்தை பார்த்து வெளிவரும் ரசிகர்களும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு நாளும் கார்த்தியின் விருமன் திரைப்படம் அதிக வசூலை ஈட்டி வருகிறது அப்படி மூன்று நாள் முடிவில் உலக அளவில் 25 கோடிக்கு..
மேல் வசூல் செய்திருந்த விருமன் திரைப்படம் நான்காவது நாள் முடிவில் சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் விருமன் படத்தின் வசூல் கூடிக் கொண்டே இருக்கையில் நிச்சயம் யாரும் எதிர்பார்க்காத அளவு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது.