சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் முதலில் தனது கடை விளம்பரத்திற்காக மட்டுமே தலைகாட்டி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது இந்த சமயத்தில் தான் இயக்குனர் ஜெடி – ஜெர்ரி சொன்ன தி லெஜண்ட் படத்தின் கதை ரொம்ப பிடித்து போக..
அந்த படத்தில் ஹீரோவாக சரவணன் அருள் நடித்து அறிமுகமானார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாட்கள் ஓடியது இந்த படத்தில் சரவணன் அருள் உடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, விவேக், யோகி பாபு, மயில்சாமி, தம்பி ராமையா, பிரபு, நாசர், கோவை சரளா.
மற்றும் தேவதர்ஷினி, சுமன், ரோபோ சங்கர், பெசன்ட் ரவி, மன்சூர் அலிகான், சிங்கம் புலி என ஒரு மிகப்பெரிய நட்சத்திரபட்டாளமே இந்த படத்தில் நடித்து அத்தினர். இந்தப் படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடியதன் காரணமாக இந்த படத்தின் வசூல் அதிகரித்தது. ஜவுளி கடை ஓனர் சரவணன் அருளுக்கு இது முதல் படம் என்றாலும்..
எதிர்பார்க்காத வசூலை பெற்று தந்தது. இதனால் சரவணன் அருள் சரி, படக்குழுவும் சரி செம்ம சந்தோஷம் அடைந்தது. இப்படி இருக்கின்ற நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் ஒட்டு மொத்தமாக எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார் கையில் இந்த திரைப்படம்.
இதுவரை உலகம் எங்கும் சுமார் 45 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. முதல் படத்திலிருந்து சரவணன் அருள் ஒரு பெரிய தொகையை அள்ளியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சரவணன் அருள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறவும் படுகிறது.