“தி லெஜண்ட்” திரைப்படம் – 4 நாள் முடிவில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

the legend
the legend

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் தனது கடை விளம்பரத்திற்காகவே முதலில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு சினிமா ஆர்வம் அதிகமாக இருந்ததால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகமாக இருந்தது ஒரு கட்டத்தில் ஜேடி – ஜெர்ரி சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தில் துணிந்து நடித்தார்.

மேலும் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். அந்த படத்திற்கு தி லெஜன்ட் என பெயர் வைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக உருவாகிய இந்த திரைப்படம். அண்மையில் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சரவணன் அருளுடன் கைகோர்த்து விவேக், ஊர்வசி ரவுத்தேலா, யோகி பாபு, சுமன், விஜயகுமார், ரோபோ சங்கர், பிரபு மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இருந்தனர் படம் தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது.

முதல் நாள் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வரவேற்பு பெற்று படம்.. ஹவுஸ் புல்லாக ஓடியதால் தற்பொழுது நல்ல வசூல் வேட்டை கண்டுள்ளது. இதுவரை நான்கு நாள் முடிவில் தி லெஜெண்ட் திரைப்படம் சுமார் 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் நிச்சயம் பிரம்மாண்டமான ஒரு வசூலை அள்ளும் என படக்குழு கணித்துள்ளது. தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.