பா. ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” படம் முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

natchathram nagargirathu
natchathram nagargirathu

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக பலம் வருபவர் இயக்குனர் பா ரஞ்சித் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் கவனிக்கப்படக்கூடிய ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். இவர் இதுவரை அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி போன்ற வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர்.

என் இவர் கடைசியாக நடிகர் ஆர்யாவை சார்பட்டா பரம்பரை என்னும் படத்தை எடுத்து அசத்தினார் இந்த படம் 70, 80 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்திருக்கப்பட்டிருந்தது. இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும் OTT தளத்தில் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஓடியது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய திரைப்படம் தான் நட்சத்திரம் நகர்கிறது இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படம் இந்த திரைப்படம் நேற்று கோலாகலமாக  திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஹரி கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

நட்சத்திரம் நகர்கிறது  படம் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெறமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நட்சத்திரம் அகர்கிறது  படம் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் முதல் நாளில் சுமார் 70 லட்சம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது  திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தாலும்.. குறைந்த திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைத்ததால் இதன் வசூல் கம்மியாகி உள்ளதாக கூறப்படுகிறது.  ஆனால் வருகின்ற நாட்களில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கும் என படக்குழு நம்பிக்கை வைத்துள்ளது.