சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் நடிகர்களுக்கு இருக்கும் பெரிய கனவு எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அதற்காக தொடர்ந்து ஒவ்வொரு நடிகரும் நல்ல நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.. அந்த வகையில் நடிகர் தனுஷ் திரை உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்துகிறார்.
அந்த வகையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். கலைப்புலி தாணு அவர்கள் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்தார். நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ், செல்வராகவன், பிரபு, யோகி பாபு, ஹிந்துஜா ரவிச்சந்திரன் பலர் நடித்து இருந்தனர்.
படம் ஒரு வழியாக கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் நல்ல விமர்சனத்தை பெற்று முதல் நாளில் நல்ல வசூலை அள்ளியது ஆனால் அடுத்த நாளே பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்ததால் இந்த படத்திற்கான வரவேற்பு குறைந்தது மேலும் வசூல் வேட்டை குறைய தொடங்கியது.
இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளியாகி இதுவரை 10 நாட்கள் ஆகி உள்ளது இதுவரை இந்த திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை மட்டுமே சுமார் 35 கோடி வரை தான் உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிப்படுகின்றன.
இதை அறிந்த ரசிகர்கள் நானே வருவேன் திரைப்படம் சோலோவாக வெளியாகி இருந்தால் நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான வசூலை அள்ளி இருக்கும் ஆனால் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியது தேவையில்லாத ஒன்று என கமெண்ட் அடித்து வருகின்றனர்.