தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் அண்மை காலமாக நல்ல நல்ல படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக 100 கோடிக்கு மேல அள்ளி சாதனை படைத்தது.
அந்த படத்தை தொடர்ந்து செல்வராக உன்னுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைத்து தனுஷ் நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அப்பா மகள் பாசம் நிறைந்த ஒரு படமாக இருந்தது இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் ஆரம்பத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து பிரபு, யோகி பாபு, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் சூப்பராக நடித்த வசதி உள்ளனர். முதல் நாளில் 12 கோடி வசூல் செய்த இந்த திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் பிரமாண்டமான வசூலை ஆளும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த நாளே மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து மக்களின் கவனத்தை தனது பக்கம் இழுத்துக் கொண்டதால் நானே வருவேன் படத்தின் வசூல் திடீரென பாதித்தது. பொன்னியின் செல்வன் படம் வந்ததிலிருந்து இந்த படத்தின் வசூல் ஏறவே இல்லை..
இப்படி இருக்கின்ற நிலையில் நானே வருவேன் திரைப்படம் 7 நாள் முடிவில் எவ்வளவு வசூலித்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே 30 கோடி வரை தான் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடவில்லை.