லியோ திரைப்படம்.. 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo
Leo

Leo : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய் இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றியை இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்தார். விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பிக்பாஸ் ஜனனி, த்ரிஷா, சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.

லியோ படத்தின் கதை என்னவென்றால்.. லியோ தாஸ் என்பவரை அவருடைய குடும்பமே கொன்று விட்டதாக நினைக்கிறது. சில வருடங்கள் கழித்து பார்த்திபன் என்கின்ற அவர் காஷ்மீர் பக்கத்தில் பிரபலமாக்குகிறார் அவர் பார்பதற்கு லியோ தாஸ் போலவே இருப்பதால் சந்தேகப்பட்டு தாஸ் குடும்பம் அங்கு போகிறது அதன் பிறகு நடப்பது தான் கதை..

21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் இணையும் நடிகை லைலா..! அவருடைய குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்

ஏற்கனவே பார்த்த கதை என்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருந்தாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை இதுவரை மட்டுமே லியோ திரைப்படம் சுமார் 435 கோடி வசூலித்துள்ளது.

வருகின்ற நாட்களில் வசூலில் மாற்றங்கள் இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சி கிளம்பி உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படம் 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

நஷ்டத்தில் இருந்து தப்பித்த விஜயின் லியோ படம்.. எந்த இடங்களில் தெரியுமா.?

அதன்படி பார்க்கையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 150 கோடி வசூல் செய்துள்ளது. பல இடங்களில் லியோ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து சரிவை நோக்கி போய்க்கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.