Jailer : நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரித்த திரைப்படம் “ஜெயிலர்”. ரஜினி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, தமன்னா, சுனில், மிர்னா மேனன்..
மோகன்லால், விநாயகன், யோகி பாபு மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் ஒரு ஆக்சன், சென்டிமென்ட் கலந்த ஒரு குடும்ப திரைப்படம் ஆகும். கடந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரஜினி ரசிகர்கள் முதல் நாளிலிருந்து கொண்டடி வருகின்றனர்.
மேலும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெற்றதால் இயக்குனர் நெல்சன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பாராட்டுகள் கிடைத்தது. மேலும் படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதனால் படத்தை தயாரித்த சன் பிக்சர் கலாநிதி மாறனும் மிகுந்த சந்தோஷத்தில் ஜெயிலர் பட இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் போன்ற பலருக்கும் காசோலை மற்றும் சொகுசு காரை பரிசாக வழங்கி மகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் ஜெயிலர் படம் தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்து தகவல் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.
அதன்படி ஜெயிலர் படம் முதல் வாரத்தில் 159.02 cr, இரண்டாவது வாரம் 42.83 cr, மூன்றாவது வாரம் 22.75 cr. நாகவது வாரத்தில் முதல் நாள் 1.70 cr, இரண்டாவது நாள் 1.04 cr, மூன்றாவது நாள் 1.81 cr, நான்காவது நாள் 2.07cr, ஐந்தாவது நாள் 0.96 cr ஆறாவது நாள் 0.81cr என மொத்தம் 232.99 கோடி வசூலித்து இருக்கிறது. வருகின்ற நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
#Jailer TN Box Office
The PROFITABLE run continues in the state.
||#600CrJailer|#Rajinikanth|#ShivaRajKumar|#Mohanlal||
Week 1 – ₹ 159.02 cr
Week 2 – ₹ 42.83 cr
Week 3 – ₹ 22.75 cr
Week 4
Day 1 – ₹ 1.70 cr
Day 2 – ₹ 1.04 cr… pic.twitter.com/omJvotIeZu— Manobala Vijayabalan (@ManobalaV) September 6, 2023