பார்த்திபன் தன்னை ஒரு நடிகராக சினிமா உலகில் முதலில் வெளிக் காட்டிக்கொண்டாலும் போகப்போக இயக்குனராக வேண்டுமென்ற ஆசை அவரை விடாமல் துரத்தியது அதை நிறைவேற்றும் வகையில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் இவரே இயக்கி நடித்த திரைப்படம் புதியபாதை.
அந்த படம் வெற்றி படமாக மாற பின் பல்வேறு படங்களை இயக்க ஆரம்பித்தார் அந்த வகையில் குடைக்குள் மழை, வித்தகன், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே என பல படங்களை இயக்கி நடித்து வெற்றி கண்டார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தன்னை நம்பி வருகின்ற ஒரு சில சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பலுவேட்டையர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாக இருக்கிறது. இப்படி சினிமா உலகில் பார்த்திபன் வித்தியாசமான கதைகளில் நடிப்பது மற்றும் படங்களை இயக்கியும் வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் இவர் இயக்கத்தில் நடிப்பில் வெளிவந்த ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7 என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று பல விருதுகளை தட்டி சென்றது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தால் அந்த படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நல்ல வரவேற்பு கிடைப்பதால் வசூல் வேட்டையும் நடத்துகிறது. இதுவரை பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் சுமார் 5 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவுகின்றன வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளும் என தெரிய வருகிறது. இதனால் இயக்குனர் பார்த்திபன் மற்றும் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்.